அலைகடல் (Live Performance) (Alaikadal) lyrics
A
A
அலைகடல் (Live Performance)
✕
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ?
ஏலோ ஏலேலோ
அடிமனதாகம் விழியில் தெரியாதோ?
ஏலோ ஏலேலோ
பாதை மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள்தானோ
வானும் நீரும் சேரும்
என்றோ ஓர் நாள்தானோ
ஆழியிலே தடமெதுவும் இல்ல
ஏலோ ஏலேலோ
வான்வெளியில் மீனொளியில் செல்ல
ஏலோ ஏலேலோ
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ?
ஏலோ ஏலேலோ
இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும்
இரவுகள் பகல் ஆகும் முகில் மழை ஆகும் முறுவலும் நீர் ஆகும்
வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்
வராதோ ஒரு மாலை நம் பூமியில்?
நான் ஒரு முறை வாழ்ந்திட
மறுகரை ஏறிட பலப்பல பிறவிகள்
கொள்வேனோ சொல்லிடு
அலைகடல் ஆழம் நிலவு அறியதோ?
ஏலோ ஏலேலோ
பேசாத மொழி ஒன்றில் காவியமா?
தானாக உருவான ஓவியமா?
தாயின்றி கருவான ஓருயிரா?
ஆதாரம் இல்லாத காதலா?
கனயிடைவெளியில் கரம்பிடிப்பாயா?
கரைதொடும் வரையில் மனம் முடிப்பாயா?
ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ?
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ?
ஏலோ ஏலேலோ
அடிமன தாகம் விழியில் தெரியாதோ?
ஏலோ ஏலேலோ
பாதை மாறும் மேகம்
எங்கோ தொலைந்தவள்தானோ
வானும் நீரும் சேரும்
என்றோ ஓர் நாள்தானோ
ஆழியிலே தடமெதுவும் இல்ல
ஏலோ ஏலேலோ
வான்வெளியில் மீனொளியில் செல்ல
ஏலோ ஏலேலோ...
✕
Thanks! ❤ | ![]() | ![]() |
Comments
Music Tales
Read about music throughout history