ஆசை வைக்கிற (Aasai Vaikkira Idam) lyrics
A
A
ஆசை வைக்கிற
✕
ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய் மாமா மாமா
வம்புபண்ணி சண்டைக்கு நின்னா
அன்பு வளருமா
அது வளர்ந்தாலும் நீ நினைக்கிற
இன்பம் மலருமா
ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய் மாமா மாமா
நீ திரும்பிப் பார்க்கும்போது
மனசு திருட்டுப் போகுது
கண்ணே திருட்டுப் போகுது
சம்மதத்தைச் சொல்லப் போறியா
இல்லே என்னைச் சமயம் பார்த்துக் கொல்லப் போறியா
ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது
காதல் எப்படி மொளைக்கும்
ஒங் கனவு எப்படிப் பலிக்கும்
கையைத் தொடாதே கையைத் தொடாதே
மானம் காற்றிலே பறக்கும்
மாமோய் மாமா மாமா
கணக்கு மீறி காடு இருக்குது
அடுக்கு மாடி வீடு இருக்குது
அதுக்கு மேலே பணம் இருக்குது
மானே உனக்கு
அத்தனையும் பாதுகாக்கும் கவலை எனக்கு
நீ கல்யாண தேதி வைக்கிறியா
இல்லே இப்போ காவிக்கடைக்கு ஆள் அனுப்பறியா
கண்ணே கண்ணே கண்ணே
என்னய்யா நீயும் ஒரு ஆம்பளையா
சும்மா இளிக்கிறியே
சொன்னதெல்லாம் விளங்கலியா
உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா
வந்தாலும் ஒட்டாது கசந்துபோகும் வேப்பிலையா
மாமோய் மாமா மாமா
ஆசை வைக்கிற இடந்தெரியணும்
மறந்து விடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே
வருத்தப்படாதே
மாமோய் மாமா மாமா
✕
Thanks! ❤ | ![]() | ![]() |
P. Bhanumathi: Top 3
1. | உன்னைவிட மாட்டேன் (Unnaivida Maattaen) |
2. | அழகான பொண்ணு நான் (Azhagaana Ponnu Naan) |
3. | ஆசை வைக்கிற (Aasai Vaikkira Idam) |
Comments
Music Tales
Read about music throughout history