Russia is waging a disgraceful war on Ukraine.     Stand With Ukraine!

கருடா (Garuda) lyrics

  • Artist: Vaaheesan Rasaiya (வாகீஸ்பரன் இராசைய்யா)
  • Album: Garuda
  • Translations: Transliteration #1, #2
A A

கருடா

வருங்காலம் இருளென்று குருடாகி போன
விருந்தாளி குருவிக்கு பருந்தாகு கதை
ஒன்று சொல்லு ரங்கு*
 
சுடுகாட்டில தாண்டவமாடிடும் ஈசனின் கைகளில் ஆடுர இராவண வீணை
செந்தமிழில் கவிகொடுத்து வாரன் கம்பங்களை* வென்று பாடுரன் வீணை
வெள்ளி நகையாடும் கூட்டமுன் பின்னே கேளிக்கையாய் பல வேடிக்கை காட்டும்
வஞ்சகம், பொய், சூது, களவு, காமம் என்று பாவங்கள் தேடிப்போகும்
பல்லக்கில் போர உன் அங்கலம் பாவங்கள் தேடும் இடங்களின்*
கல்லறை வாசலை தேடியே போவுது
காணல் தண்ணி போல் மாயங்கள் ஆனது
 
சுவை, ஒளி, உரு, ஓசை, நாற்றம் என் கவிகளின் கலந்து பேசும்
போர் வலிகளை கண்ட தேசம்,
என் தலைமுறை கேள்வி கேட்க்கும்
என் நாவும் உயிர் போகும்வரை பாடும்,
கலைத்தாகம் ஒருநாள் நிறைவாகும்
என் கதையும் வரலாறாய் மாறும்
செந்தமிழும் ஒருநாள் கொடியேறும்
சேர, சோழ, பாட்டன் ஆண்ட பூமி,
பாடும் பொருளாய் என்னை தந்த சாமி
எந்தன் கலையில் சொல்லும் பொருளும் ஏந்தி
பாடவந்த பாலன் ஒருவனாகி
வேடன் கையில தாங்கிய வில்லும்,
பாம்பின் வாயில விடமொரு பல்லும்
சிறுவன் கைகொண்ட வரிகளே ஜொ(சொ)ல்லும்,
வாழ்க்கை வலிகளை பலங்கண்டு வெல்லும்
 
தோக்க கூடாது, தோத்தாலும் வரலாறு இல்லாம சாக கூடாது
 
காலம் கடந்து சோகம் கலந்து
தாகமெடுத்து எழுதிய வரிகள்
வாய்மை இழந்து வாயைப் பிளந்து
காத்துக்கிடக்குது வன்முறை எலிகள்*
எழுத்து கருவியென்னும் ஆயுதமெடுத்து
என் தமிழில் வில் அம்புகள் தொடுத்து
வான் தொடுவரை என் சிறகுகள் அடித்து
மாண்டாலும் உயிர்த்தெழுகிற பருந்து
அகத்தின் அழகு முகத்தில் தயங்கி தெரியுது,
பிறந்த குழந்தை முதலில் நடிக்க பழகுது
உறங்கும் வரையில் உலகம் முழுக்க பெரியது,*
பறந்துப் பாரு உயரம் உன்னைவிட சிறியது
தூங்கும்* உலகம் உன்னை தாங்கும் வரையும்,
சூதும் வாதும் உன்னை சூழும் வரையும்*
இருண்ட காலத்தில் இருந்தவனிவன்*,
உதவு* காலத்தைக் கடந்தவன்
ஆயக்கலைகளை தேடியலைபவன்,
கலைத்தாகமெடுத்து பாடும் பாலகன்
நான் நேற்று பிறந்து* பேரு வைத்தவன்,
முப்பாட்டன் கதைகள் கேட்டு வளர்ந்தவன்
படைச்சவன் கதையில பலங்கொண்டு எழுந்தவன்,
நடைப்பிண காட்டுல கலை கொண்டு திரிஞ்சவன்
நாடு பொருள் தேட நானோ கலைக்காக
பாடுபொருள் கொண்டு வாரன் உனக்காக
எம் தலைமுறைகளின் வாழ்வியல் ஒருவகை,
நம் கனவுகள் அதைக்காத்திடும் கருவறை
இனி ஒருமுறை எம்மை சீண்டிட இடமில்லை,
செம்மொழியினை இனி மறந்திட மணமில்லை
 
வா! என் முயற்சி முழுபெற* வா!
உன் தடைகள் உடைத்து வா!
முழங்கு! படைகள் எடுத்து வா!
 
Thanks!
thanked 1 time
Submitted by GodwithusGodwithus on Thu, 11/08/2022 - 18:37
Last edited by GodwithusGodwithus on Fri, 16/09/2022 - 03:20
Submitter's comments:

* uncertain

 

Translations of "கருடா (Garuda)"
Comments
Read about music throughout history