✕
Album:
Et pourquoi les crayons
Asli
Terjemahan
Ta p'tite flamme
காதலியே, உனது சிறு பொறி !
காதலியே, உனது சிறு பொறி ! (பிரெஞ்சுக் காதல் பாடல்)
உனது சிரிக்கும் கண்களில்-
ஏதோ ஒரு உயிரோட்டம் உள்ளது !
இந்தச் சிறு பொறிதான் –
அந்தக் கனலை -
அந்தக் கூக்குரலை-
அந்த ஒளிர்வை
எனக்குத் தருகிறது !
உனது அந்த ஒரு பார்வையில்தான்-
உனது கண்களில்தான்-
நான்-
மன இதத்தைப் பெறுகிறேன் !
எனக்கு நீ தேவை என்பதை-
உனது ஒரு சிரிப்புதான் சொல்கிறது !
இங்கேயே இரு!
என்னைப் பார் !
உனது இன்னோசைக் குரலில்-
ஒரு மகிழ்ச்சி பொங்குகிறது !
அதைக் கேட்டு –
என் இதயம் விடுதலை பெறுகிறது !
உனது கரங்களில் என்னை நீ தாங்குவதாக உணர்கிறேன் !
ஒவ்வொரு நாளும் பாடம் சொல்லும் காதலை –
நான் வாழ்வதாகவே உணர்கிறேன் !
நான் விலகித் தொலைவில் இருக்கும்போது-
உன்னையே நினைக்கிறேன் !
உனது கண்ணின் சிறு ஒளியால்-
நான் மன இதத்தைப் பெறுகிறேன் !
நான் தொலைவில் இருக்கும்போது-
நன் உன்னையே நினைக்கிறேன்!
உனது கண்ணின் ஒளியையே நினைக்கிறேன் !
உன்னிலும் –
உன் கண் ஒளியிலும்-
நான் இருப்பதாக உணர்கிறேன் !
நமது இருவர் பழக்கத்திலும்-
ஒரு உலகப் பொதுமை இருக்கிறது !
மாலை வெயிலைவிட ஒரு வெளிச்சப் பொறி இருக்கிறது!
நீ என்னை மணக்க விரும்புகிறாயா?-
நீ எனது வழியில் பங்குகொள்கிறாயா?
எல்லாக் காலத்திலும் நாம் ஒன்றாக இருக்க!
என்னைப் பொறுத்தவரை-
நான் உனது பாதைக்கு வரத் தயாராக உள்ளேன் !
You can thank submitter by pressing this button
Soundarapandian S.diunggah pada tanggal 28 Okt 2017 - 16:05
Kontributor:
Komentar penulis:
This is in Tamil language.
Tamil language is a classical language; Only a few languages in the world are termed as classical languges.
So my plea is please include in your list of languages 'Tamil' too.
( ‘Your Little Flame’ என்ற பிரெஞ்சுப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் டெய்லர்
ஆவார். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன் )
✕



Don Juan


Komentar 1
Hi. Tamil is in our language lists. As it's not as popular as, let's say, English, it's shown in the 'More languages' menu when you select a language. I corrected it now.