✕
Euphoria
Click to see the original lyrics (English, Korean)
பரவசமே
பரவசமே
எனது கைகளை பிடித்துக்கொள்
நீ தான் எந்தன் பரவசத்தின் காரணமே
பரவசமே
பரவசமே
கதவுகளை மூடி விடு
உன்னோடு இருக்கும் சமயம் கனவுகளில்(யுடோப்பியாவில்) திழைக்கின்றேன்
மீண்டும் என் வாழ்வை ஒளிர்விக்க வந்த கதிரோனே
என் மழலைக்கனவுகளின்
மறுபிறப்பே
இது என்ன உணர்சி என்று புரியவில்லை
இன்னும் கனவுகளில் திழைக்கின்றேனோ ?
பாலைவனத்தில் ஒரு பசுஞ்சோலை பூக்கிறதே
என் ஆழ்மனதில் இருந்து ஒன்று முன்னே பிறக்கவே
மகிழ்ச்சி சூழுதே, மூச்சுக்காற்றும் தேம்பேதே
எல்லாம் மறையுதே
எங்கோ கடலின் ஓசை தூரமாய் கேட்கின்றதே
கனவினைத் தாண்டி காடுகளைத் தாண்டி
தெளிவாய் கேட்கவே பின்தொடர்கிறேன்
என் கைகளை பிடித்துக்கொள்
நீ தானே எந்தன் பரவசத்தின் காரணம்
பரவசமே
எந்தன் கைகளை பிடித்துக்கொள்
நீ தானே எந்தன் பரவசத்தின் காரணமே
கதவுகளை மூடி விடு
உன்னோடு இருக்கும் போது கனவுகளில் திழைக்கிறேன்(யுடோப்பியாவில்)
நீ எங்கே சுற்றித்திரிகிறாய்
அழிந்த கனவினை தேடி அழைகிறாயா ?
விதி நிச்சியத்ததை விட அது மாறுபட்டதே
நாம் பல வலிகளை ஒன்றாய் பறிமாறுகின்றோம்
எங்கும் செல்லாதே
கொஞ்ச நேரம்
என் கனவுகளில் நிலைத்து இரு
எங்கோ கடலின் ஓசை தூரமாய் கேட்கின்றதே
கனவினை தாண்டி காடுகளை தாண்டி
தெளிவாய் கேட்கவே பின்தொடர்கிறேன்
என் கைகளை பிடித்துக்கொள்
நீ தானே எந்தன் பரவசத்தின் காரணம்
பரவசமே
என் கைகளை பிடித்துக்கொள்
நீ தான் எந்தன் பரவசத்தின் காரணமே
இவ்வுலகமே சுக்குநூறாய் நொறுங்கிப்
போனாலும்-யாரோ
இவ்வுலகை அசைத்தாலும்
கவலை இல்லை
என் கைகளை விட்டு அகலாதே
என்னை இக்கனவிலிருத்து எழுப்பாதே
எங்கோ கடலின் ஓசை தூரமாய் கேட்கின்றதே
கனவினை தாண்டி காடுகளை தாண்டி
தெளிவாய் கேட்கவே பின்தொடர்கிறேன்
என் கைகளை பிடித்துக்கொள்
நீ தானே எந்தன் பரவசத்தின் காரணம்
பரவசமே
எந்தன் கைகளை பிடித்துக்கொள்
நீ தானே எந்தன் பரவசத்தின் காரணமே
Oh yeah, yeah, yeah, yeah, yeah, yeah (Oh)
Oh yeah, yeah, yeah, yeah, yeah, yeah (பரவசமே )
Oh yeah, yeah, yeah, yeah, yeah, yeah
கதவுகளை மூடி விடு
உன்னோடு இருக்கும் போது கனவுகளில்(யுடோப்பியாவில்) திழைக்கிறேன்
| Thanks! ❤ thanked 1 time |
| You can thank submitter by pressing this button |
Thanks Details:
Guests thanked 1 time
Submitted by
Yaali on 2021-10-18
✕
Translations of "Euphoria"
Tamil #1, #2
Comments
Russia is waging a disgraceful war on Ukraine. Stand With Ukraine!
About translator
மூச்சுக்காற்றும் தேம்புதே