Favorites
Share
Font Size
Original lyrics
Swap languages

கண்மணி அன்போடு காதலன்

கண்மணி அன்போடு காதலன் நான்—நான் எழுதும் letter—ச்சி, மடல்?
இல்ல கடிதாசி வச்சிகளாமா?
இல்ல வேணாம், கடிதம்னே இருக்கட்டும். படி.
கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
 
ஹஹஹா, பாட்டாவே படிச்சிடியா?
அப்போ நானும், மொதல்ல கண்மணி சொன்னேன்ல
இங்க பொன்மணி போட்டுக்க,
பொன்மணி, உன் வீட்ல சௌக்கியமா?
நான் இங்க சௌக்கியம்.
 
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?
நான் இங்கு சௌக்கியமே...
ஆஹா ஓ, உன்ன நெனச்சி பாக்கும்போது கவித மனசுல அருவி மாறி கொட்டுது,
ஆனா அத எழுதனும்னு ஒக்கானந்தா அந்த எழுத்துதான், வார்த்த.
 
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது (அதான்)
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
அதேதான், ஆஹா! பிரமாதம்! கவித கவித! படி!
 
கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?
நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
 
ஓ... ஹோ... கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே...
[லா ல லா லா லா ல‌ லா ல லா லா லா...]
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?
நான் இங்கு சௌக்கியமே...
[லா ல லா லா லா ல‌ லா ல லா லா லா...]
 
ம்ம்... எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னமோ தெரில, என்ன மாயமோ தெறில எனக்கு ஒண்ணுமே ஆவர்தில்ல—
இதயும் எழுதிக்க.
நடுவுல நடுவுல மானே, தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும். ஆன்?
இத பாரு, எனக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும்
உன் ஒடம்பு தாங்குமா? தாங்காது—
அபிராமி அபிராமி அபிராமி
—அதையும் எழுதனுமா?
—ஆஹான், இது காதல். என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது,
ஆனா நான் அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ அப்டின்னு நினைக்கும்போது, வர அழுக கூட நின்னுடுது.
மனிதர் உணர்ந்துகொள்ள இது மணித காதல் அல்ல
(காதல் அல்ல... காதல் அல்ல... காதல் அல்ல...)
அதையும் தாண்டி புனிதமானது.
(புனிதமானது... புனிதமானது... புனிதமானது...)
 
உண்டான காயம் எங்கும் தன்னாலே மாறிப்போன மாயம் என்ன?
பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும்
என் மேனி தாங்கிக்கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
 
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது...
 
அபிராமியே தாலாட்டும் சாமியே
நாந்தானே தெரியுமா?
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா?
 
சுப லாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே
அபிராமியே தாலாட்டும் சாமியே
நாந்தானே தெரியுமா?
உனக்கு புரியுமா?
 
லா ல லா லா லா ல‌ லா ல லா லா லா...
(லா ல லா லா லா ல‌ லா ல லா லா லா...)
லா ல லா லா லா ல‌ லா ல லா லா லா...
(ல ல லா லா லா ல‌ லா ல லா லா லா...)
ஒ ஹோ லா ல லா லா லா ல‌ லா ல லா லா லா...
லா ல லா லா லா ல‌ லா ல லா லா லா...
 
Transliteration

Kanmani Anbodu Kaadhalan

kanmani anboda kaadhalan naan—naan ezhudhum letter—cchi, madal?
illa kadidhaasi vacchigalaamaa?
illa venaam, kadidhamne irukkattum. padi.
kanmani anbodu kaadhalan
naan ezhudhum kadidhame
 
hahahaa, paattaave padicchidiyaa?
appo naanum, modhalla kanmani sonnenla
inga ponmani pottukka,
ponmani, un veetla saukkiyamaa?
naan inga saukkiyam.
 
ponmani un veettil saukkiyamaa?
naan ingu saukkiyame...
aahaa oh, unna nenacchi paakkumbodhu kavidha manasula aruvi maari kottudhu,
aanaa adha ezhudhanumnu okkaanandhaa andha ezhuthudhaan, vaartha.
 
unnai enni paarkkaiyil kavidhai kottudhu (adhaan)
adhai ezhudha ninaikkaiyil vaarthai muttudhu
adhedhaan, aahaa! piramaadham! kavidha kavidha! padi!
 
kanmani anbodu kaadhalan
naan ezhudhum kadidhame
ponmani un veettil saukkiyamaa?
naan ingu saukkiyame
unnai enni paarkkaiyil kavidhai kottudhu
adhai ezhudha ninaikkaiyil vaarthai muttudhu
 
oh... ho... kanmani anbodu kaadhalan
naan ezhudhum kadidhame...
[laa la laa laa laa la laa la laa laa laa...]
ponmani un veettil saukkiyamaa?
naan ingu saukkiyame...
[laa la laa laa laa la laa la laa laa laa...]
 
mm... enakkundaana kaayam adhu thannaala aaridum
adhu ennamo therila, enna maayamo therila enakku onnume aavardhilla—
idhayum ezhudhikka.
naduvula naduvula maane, thene ponmaane idhellaam pottukkanum. aan?
idha paaru, enakku enna kaayamnaalum odambu thaangidum
un odambu thaangumaa? thaangaadhu—
abiraami abiraami abiraami
—adhaiyum ezhudhanumaa?
—aahaan, idhu kaadhal. en kaadhal ennanu sollaama enga enga azhugaiyaa varudhu,
aanaa naan azhudhu en sogam unna thaakkidumo aptinnu ninaikkumbodhu, vara azhuga kooda ninnududhu.
manidhar unarndhugolla idhu manidha kaadhal alla
(kaadhal alla... kaadhal alla... kaadhal alla...)
adhaiyum thaandi punidhamaanadhu.
(punidhamaanadhu... punidhamaanadhu... punidhamaanadhu...)
 
undaana kaayam engum thannaale maarippona maayam enna?
ponmaane ponmaane
enna kaayam aana podhum
en meni thaangikkollum
undhan meni thaangaadhu sendhene
 
endhan kaadhal ennavendru sollaamal
enga enga azhugai vandhadhu
endhan sogam unnai thaakkum
endrennum podhu vandha azhugai nindradhu
manidhar unarndhu kolla idhu manidha kaadhalalla
adhaiyum thaandi punidhamaanadhu...
 
abiraamiye thaalaattum saamiye
naandhaane theriyumaa?
sivagaamiye sivanil neeyum paadhiye
adhuvum unakku puriyumaa?
 
suba laali laaliye laali laaliye
abiraami laaliye laali laaliye
abiraamiye thaalaattum saamiye
naandhaane theriyumaa?
unakku puriyumaa?
 
laa la laa laa laa la laa la laa laa laa...
(laa la laa laa laa la laa la laa laa laa...)
laa la laa laa laa la laa la laa laa laa...
(la la laa laa laa la laa la laa laa laa...)
oh ho laa la laa laa laa la laa la laa laa laa...
laa la laa laa laa la laa la laa laa laa...
 
Comments