✕
Euphoria
Στίχοι τραγουδιού (Αγγλικά, Κορεάτικα)
பரவசமே
பரவசமே
எனது கைகளை பிடித்துக்கொள்
நீ தான் எந்தன் பரவசத்தின் காரணமே
பரவசமே
பரவசமே
கதவுகளை மூடி விடு
உன்னோடு இருக்கும் சமயம் கனவுகளில்(யுடோப்பியாவில்) வாழ்கிறேன்
நீ எந்தன் வாழ்வில் மீண்டும் ஒளிர்ந்த கதிரவனே
குழந்தைப்பருவ கனவுகளின் மறுபிறப்பே
இது என்ன உணர்ச்சிகள் என்று புரியவில்லை
இன்னும் கனவுகளில் திழைக்கின்றேனோ ?
பாலைவனத்தில் ஒரு பசுஞ்சோலை பூக்கிறதே
என் ஆழ்மனதில் இருந்து ஏதோ முன்னே பிறக்கின்றதே
மகிழ்ச்சி சூழுதே, மூச்சுக்காற்றும் தேம்பேதே
எல்லாம் தெளிவாய் தெரியுதே
எங்கோ கடலின் ஓசை தூரமாய் கேட்கின்றதே
கனவினை தாண்டி காடுகளை தாண்டி
தெளிவாய் கேட்கவே பின்தொடர்கிறேன்
என் கைகளை பிடித்துக்கொள்
நீ தானே எந்தன் பரவசத்தின் காரணம்
பரவசமே
எந்தன் கைகளை பிடித்துக்கொள்
நீ தானே எந்தன் பரவசத்தின் காரணமே
Oh yeah, yeah, yeah, yeah, yeah, yeah (Oh)
Oh yeah, yeah, yeah, yeah, yeah, yeah (பரவசமே )
Oh yeah, yeah, yeah, yeah, yeah, yeah
கதவுகளை மூடி விடு
உன்னோடு இருக்கும் போது கனவுலகில்(யுடோப்பியாவில்) வாழ்கிறேன்
நீ எங்கே சுற்றித்திரிகிறாய்
அழிந்த கனவினை தேடி அழைகிறாயா ?
விதி சொன்னதை விட அது மாறுபட்டதே
நாம் பல வலிகளை ஒன்றாய் பறிமாறுகிறோம்
எங்கும் செல்லாதே
கொஞ்ச நேரம் என் கனவுகளில் நிலைத்து இரு
எங்கோ கடலின் ஓசை தூரமாய் கேட்கின்றதே
கனவினை தாண்டி காடுகளை தாண்டி
தெளிவாய் கேட்கவே பின்தொடர்கிறேன்
என் கைகளை பிடித்துக்கொள்
நீ தானே எந்தன் பரவசத்தின் காரணம்
Oh, yeah, yeah, yeah, yeah, yeah, yeah
பரவசமே
என் கைகளை பிடித்துக்கொள்
நீ தான் எந்தன் பரவசத்தின் காரணமே
இவ்வுலகமே சுக்குநூறாய் நொறுங்கிப்
போனாலும்-யாரோ
இவ்வுலகை அசைத்தாலும்
கவலை இல்லை
என் கைகளை விட்டு அகலாதே
தயவாய் கேட்கின்றேன் என்னை இக்கனவுலகிலிருந்து எழுப்பாதே
எங்கோ கடலின் ஓசை தூரமாய் கேட்கின்றதே
கனவினை தாண்டி காடுகளை தாண்டி
தெளிவாய் கேட்கவே பின்தொடர்கிறேன்
என் கைகளை பிடித்துக்கொள்
நீ தானே எந்தன் பரவசத்தின் காரணம்
பரவசமே
எந்தன் கைகளை பிடித்துக்கொள்
நீ தானே எந்தன் பரவசத்தின் காரணமே
Oh yeah, yeah, yeah, yeah, yeah, yeah (Oh)
Oh yeah, yeah, yeah, yeah, yeah, yeah (பரவசமே )
Oh yeah, yeah, yeah, yeah, yeah, yeah
கதவுகளை மூடி விடு
உன்னோடு இருக்கும் போது கனவுலகில்(யுடோப்பியாவில்) வாழ்கிறேன்
| Ευχαριστώ! ❤ thanked 11 times |
| Μπορείς να ευχαριστήσεις τον υποβάλλων πατώντας αυτό το κουμπί. |
Λεπτομέρειες των ευχαριστιών:
Επισκέπτες ευχαρίστησαν 11 φορές
Υποβλήθηκε από
Yaali στις 2021-10-18
✕
Μεταφράσεις του τραγουδιού ''Euphoria''
Ταμίλ #1, #2
Σχόλια
- Εισέλθετε στο σύστημα ή εγγραφείτε για να υποβάλετε σχόλια
Russia is waging a disgraceful war on Ukraine. Σταθείτε με την Ουκρανία!
Περίληψη μεταφραστή
மூச்சுக்காற்றும் தேம்புதே