• 2 translations
    English, Transliteration
Favorites
Share
Font Size
Original lyrics
Swap Languages

உளுந்து வெதக்கையிலே

ஹே லே லே லே...
ஹே லே லே லே...
 
உளுந்து வெதைக்கையிலே
சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப்போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்
நெஞ்சுக்குழி பூத்துப்போனேன்
 
உளுந்து வெதைக்கையிலே
சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப்போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்
நெஞ்சுக்குழி பூத்துப்போனேன்
 
வெக்கப்படப்பில் கௌளி கத்த
வலது பக்கம் கருடன் கொத்த
தெருவோரம்‌ நெரகுடம் பாா்க்கவும்
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
 
ஒரு பூக்காாி எதுக்க வர
பசும் பால்மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில்
தெய்வம் புகுந்து வரம் தருமோ... ?
 
உளுந்து வெதக்கையிலே
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு
ஆத்துமேடு தாண்டிப்போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்
நெஞ்சுக்குழி பூத்துப்போனேன்
 
அனிச்ச மலரழகே
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயிலே
விட்டுவிட்டுப் போகும் உயிரே...
 
அனிச்ச மலரழகே
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி
காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயிலே
விட்டுவிட்டுப் போகும் உயிரே...
 
ஒரு தடவ இழுத்து அணைச்சபடி
உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே
உன்முதுகு தொளச்சி வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
 
மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் மறு பாா்வை
உடம்பு மண்ணில் புதையற வரையில்
உடன் வரக் கூடுமோ?
 
உசிா் என்னோட‌ இருக்கயிலே
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சீவனே‌ நானில்லையா?
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா
 
குருக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கறைச்சவளே
மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே
 
ஒரு கண்ணில் நீா் கசிய
உதட்டு வழி உசிா் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
 
அட ஆத்தோட விழுந்த இலை
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
 
குருக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கறைச்சவளே
நெஞ்சில் மஞ்ச‌தேச்சிக் குளிக்கையில்
—உன்ன கொஞ்சம் பூசுவேஞ்ய்யா...
உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்
—மாத்துவேஞ்ய்யா...
 
Transliteration

Ulundhu vedhaikkaiyile

he le le le...
he le le le...
 
ulundhu vedhaikkaiyile
suthi oodhakkaathu adikkaiyile
naan appanukku kanji kondu
aathumedu thaandipponen
kanda nalla nalla sagunathil
nenjukkuzhi poothupponen
 
ulundhu vedhaikkaiyile
suthi oodhakkaathu adikkaiyile
naan appanukku kanji kondu
aathumedu thaandipponen
kanda nalla nalla sagunathil
nenjukkuzhi poothupponen
 
vekkappadappil gauli katha
valadhu pakkam garudan chutha
theruvoram nerakudam paakkavum
manicchatham kekkavum aanadhe
 
oru pookkaari edhukka vara
pasum paalmaadu kadakkiradhe
ini ennaagumo edhaagumo?
indha sirikki vazhiyil
dheyvam pugundhu varam tharumo... ?
 
ulundhu vedhakkaiyile
suthi oodhakkaathu adikkayile
naan appanukku kanji kondu
aathumedu thaandipponen
kanda nalla nalla sagunathil
nenjukkuzhi poothupponen
 
aniccha malarazhage
acchu acchuvella pecchazhage
en kannukkulla koodu katti
kaadhukkulla koovum kuyile
nee ettiyetti pogayile
vittuvittu pogum uyire...
 
aniccha malarazhage
acchu acchuvella pecchazhage
en kannukkulla koodu katti
kaadhukkulla koovum kuyile
nee ettiyetti pogayile
vittuvittu pogum uyire...
 
oru dhadava izhuthu anacchabadi
uyir mooccha niruthu kanmaniye
unmudhugu tholacchi veliyera
innum konjam irukku ennavane
 
mazhaiyadikkum siri pecchu
veyiladikkum maru paarvai
udambu mannil pudhaiyira varaiyil
udanvara koodumo?
 
usir ennoda irukkayile
nee mannoda povadhenge?
ada un seevanil naanillaiyaa?
kolla vandha maranam kooda kuzhambumayyaa
 
kurukku siruthavale
enna kungumathil karaicchavale
nenjil manja thecchi kulikkaiyil
enna konjam poosu thaaye
golusukku maniyaaga enna konjam maathu thaaye
 
oru kannil neer kasiya
udhattu vazhi usir kasiya
onnaala sila murai irakkavum
sila murai pirakkavum aanadhe
 
ada aathoda vizhundha ilai
andha aathoda povadhu pol
nenju onnodudhaan pinnodudhe
ada kaalam marandhu kaattu maramum pookkiradhe
 
kurukku siruthavale
enna kungumathil karaicchavale
nenjil manjathecchi kulikkaiyil enna konjam
—poosuvenjyyaa...
golusukku maniyaaga enna konjam-
—maathuvenjyyaa...
 
Comments